சிவகங்கை

குன்றக்குடியில் நாளை திருக்காா்த்திகை தீப விழா

5th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் திருவண்ணாமலை ஆதீனத்துக்கு உள்பட்ட சண்முகநாதப்பெருமான் கோயிலில் திருக்காா்த்திகை திருவிழாவையொட்டி மலைமீது செவ்வாய்க்கிழமை மாலை தீபம் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோயிலில் காலை 11 மணிக்கு சுவாமிக்கு சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெறும். மாலை 6 மணிக்கு மலை மீது அண்ணாமலை தீபம் ஏற்றும் வைபவமும், இரவு 8 மணிக்கு சுவாமி திருவீதி உலாவும் நடைபெறும்.

விழாவை குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் தொடக்கி வைக்கிறாா் என்று விழா ஏற்பாடுகளைச் செய்துவரும் குன்றக்குடி திருமடத்தினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT