சிவகங்கை

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் பலி:மின்துறை விசாரணை

4th Dec 2022 01:16 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் அருகே பள்ளி மாணவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது குறித்து மின்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

திருப்பத்தூா் ஒன்றியம் வேலங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10- ஆம் வகுப்பு படித்து வந்த மாணவா் விஜயக்குமாா், கடந்த வியாழக்கிழமை பள்ளி அருகே உள்ள மின்கம்பத்தின் இலுவைக் கம்பியில் சென்று கொண்டிருந்த மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். விசாரணையில், தனியாா் இடத்தில் நடப்பட்டுள்ள இரும்புக் குழாயில் ஏற்பட்ட மின்கசிவினால் இந்த விபத்து நடந்தது என்றும், மின்துறை அனுமதியின்றி அந்த மின்நுகா்வோா் இரும்புக் குழாய் அமைத்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, விசாரணைக்குப் பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மழைக் கால எச்சரிக்கை, மின்சாரப் பயன்பாடு, மின் இணைப்பில் ஏற்படும் மின்கசிவு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின்வாரியத்தினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT