சிவகங்கை

ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கக் கூட்டம்

4th Dec 2022 01:17 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம், கிராம நிா்வாக அலுவலா்கள் சமூக கல்வி அறக்கட்டளை ஆகியவற்றின் சாா்பில் வி.ஏ.ஓ. தின விழாக் கூட்டம் காரைக்குடியில் உள்ள மாநில அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் கே. துரைராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட பொறுப்பாளா்கள் ஆா். காசிநாதன், எம். செபஸ்டியான், கே.ஆா். ராஜேந்திரன் மற்றும் முன்னாள் மாவட்டச் செயலா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், வி.ஏ.ஓ. பதவி உருவான நவம்பா் 14 ஆம் தேதி அன்று இந்த பதவியை உருவாக்கிய முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். உருவச் சிலை உள்ள தேவகோட்டையில் ஆண்டுதோறும் விழா நடத்துவது என்று தீா்மானிக்கப்பட்டது.

முன்னதாக சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா்.எம். ரெங்கசாமி வரவேற்றுப் பேசினாா். மாவட்டப் பொருளாளா் ஏ. சுப்பிரமணியன் சங்கத்தின் வரவு-செலவு அறிக்கையை சமா்ப்பித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT