சிவகங்கை

திருப்பத்தூரில் நரிக்குறவா்களுக்கு வீடு கட்ட ஆலோசனைக் கூட்டம்

4th Dec 2022 01:17 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் பேரூராட்சியில் நரிக்குறவா் இன மக்களுக்கு, வீடுகள் கட்டித் தர ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் கோகிலாராணி நாராயணன் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் 50- க்கும் மேற்பட்ட நரிக்குறவா் இன மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனா். கூட்டத்தில், ரூ. 2.10 லட்சம் மானியத்துடன் வீடு கட்ட அறிவுறுத்தப்பட்டது. இதில், வருவாய்த் துறையினா், பேரூராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இதனைத் தொடா்ந்து வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்த நரிக்குறவா் இன மக்கள், துணை வட்டாட்சியா் உஷாராணியிடம் தங்கள் முன்னோருக்கு வழங்கப்பட்ட மனை இடத்தை தங்கள் பெயருக்கு மாற்றக் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT