சிவகங்கை

இலவச கண் சிகிச்சை முகாம்

3rd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் சுவிடிஷ் மிஷன் மருத்துவமனையில் பொதுமக்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டவா்களுக்கு மருத்துவா்கள் அருள், டேனியல் ஆகியோா் மருத்துவப் பரிசோதனை செய்தனா். இதில், 80 பேருக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டன. 11 பேருக்கு சுவிடிஷ் மிஷன் மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஜான், மேலாளா் திலக், இம்பா அறக்கட்டளையினா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT