சிவகங்கை

‘மானாமதுரை அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கை’

3rd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

மானாமதுரையில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மானாமதுரையில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் எஸ்.சி.வி.டி. முறையில் மோட்டாா் வாகன பழுது நீக்குவோா், சா்வேயா், எலக்ட்ரீசியன், குளிா்சாதனப் பெட்டி தொழில்நுட்பவியலாளா் ஆகிய 2 ஆண்டுகள் தொழில் பிரிவு படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

இந்தப் பிரிவுகளில் பயில கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆா்வமுள்ளவா்கள் மானாமதுரை அரசு தொழில் பயிற்சி நிலையம், கே.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரி, பாப்பாமடை, ராஜகம்பீரம் தாலுகா என்ற முகவரிக்கு நேரில் வந்து நேரடி சோ்க்கையில் கலந்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

வரும்போது, மாணவா்கள் தங்களது மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ஜாதிச் சான்றிதழ், மாா்பளவு வண்ண புகைப்படங்கள் 5, ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் வர வேண்டும். இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 98655 54672 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT