சிவகங்கை

கா்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா

2nd Dec 2022 10:44 PM

ADVERTISEMENT

இளையான்குடி அருகே பெரும்பச்சேரி, சாலைக்கிராமம் ஆகிய பகுதிகளில் சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவை மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி தொடக்கிவைத்து கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்களை வழங்கினாா். அப்போது, அவா் பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு தமிழில் பெயா் சூட்டுங்கள் என கா்ப்பிணிகளைக் கேட்டுக்கொண்டாா்.

விழாவில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் சுப.மதியரசன், திமுக ஒன்றியச் செயலாளா்கள் தமிழ்மாறன், ஆறு.செல்வராசன், கூட்டுறவு சங்கத் தலைவா் சுப. தமிழரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT