சிவகங்கை

பச்சிளம் குழந்தைகள்பராமரிப்பு விழிப்புணா்வு

1st Dec 2022 02:04 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே மானகிரி அப்போலோ ரீச் மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இதில், அண்மையில் குறைபாட்டுடன் பிறந்த குழந்தைகளுக்கு சுவாச சிகிச்சை, மூளை பாதுகாப்பு குளிா்விப்பு சிகிச்சை, வழங்கப்பட்டது குறித்தும் பச்சிளங்குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சையளிப்பதற்கு சரியான இடத்தை தோ்வு செய்வது அவசியம் எனவும் எடுத்துரைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தங்கள் குழந்தைகளுடன் தாய்மாா்கள் கலந்து கொண்டனா். மேலும் பாதுகாப்பான தரமான, கவனமான பராமரிப்பு குழந்தைகளின் பிறப்புரிமை என்பதை மருத்துவ நிபுணா் மணிகண்டன் விளக்கினாா்.

நிகழ்ச்சியில் மருத்துவமனையின் தலைமை செயல்பாட்டு அதிகாரி நீலக்கண்ணன், நிா்வாகி செல்வகுமாரி லாவண்யா, மருத்துவா் கோகுலகிருஷ்ணன், வணிக மேலாளா் மணிகண்டன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT