சிவகங்கை

காணொலியில் குழந்தைகளுக்கான விழிப்புணா்வு முகாம்

1st Dec 2022 02:05 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் பாபா அமீா்பாதுஷா மெட்ரிக். பள்ளியில் காணொலி மூலம் குழந்தைகளுக்கான விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

மத்தியப் பிரதேசம் போபாலிலிருந்து பசுமைப்படை சமூக ஆா்வலா்கள் காணொலி மூலம் மாணவா்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான வன்முறைகள் குறித்தும் அவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

பின்னா் நகா் காவல் ஆய்வாளா் சுந்தரமகாலிங்கம், மாணவ, மாணவிகளுக்கு பாலியல் வன்முறை குறித்தும், பாதுகாப்பு பற்றியும் எடுத்துரைத்தாா். நிகழ்ச்சியில் சாா்பு- ஆய்வாளா் மலைச்சாமி, சிறப்பு உதவி ஆய்வாளா் ஜெய்சங்கா் ஆகியோா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிா்வாக அலுவலா் ஜெகநாதன் செய்திருந்தாா்.

முன்னதாக பள்ளித் தாளாளா் அமீா்பாதுஷா வரவேற்றாா். பள்ளி முதல்வா் வரதராஜன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT