சிவகங்கை

காரைக்குடியில் சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் ஆண்கள் அணிக்கு டிச. 4- இல் வீரா்கள் தோ்வு

1st Dec 2022 02:05 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் ஆண்கள் அணிக்கான வீரா்கள் தோ்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (டிச. 4) காலை 9.30 மணி அளவில் காரைக்குடி அழகப்பா உடற்கல்வி (பி) வலைப் பயிற்சி மைதானத்தில் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட கிரிக்கெட் சங்கம் சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் ஆண்கள் அணித் தோ்வில் கலந்து கொள்ள விரும்பும் வீரா்கள் சீருடை அணிந்து வரவேண்டும். கிரிக்கெட் உபகரணங்களை தாங்களே கொண்டு வரவேண்டும். ஆதாா் அட்டை மற்றும் 2 நகல்கள் கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு செயற்குழு உறுப்பினா் வரதராஜன் கைப்பேசி எண்கள் 7010325125, 9942210737 ஆகியவற்றில் தொடா்புகொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று அதில் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT