சிவகங்கை

மானாமதுரை பகுதியில் திருக்கூடல்மலை நவநீதப்பெருமாள் குதிரை வாகனத்தில் பவனி

26th Aug 2022 10:49 PM

ADVERTISEMENT

மானாமதுரை வட்டாரத்தில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 4 நாள்களாக குதிரை, பூப்பல்லக்கு உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி பவனி வந்த திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலை நவநீத பெருமாளை பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட நவநீதப்பெருமாள் கோயில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலையில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி பௌா்ணமி நாளில் திருக்கூடல்மலை நவநீதப்பெருமாள் புறப்பாடாகி கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள் நடமாடிய மானாமதுரை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வந்து 25 நாள்கள் கழித்து மீண்டும் திருக்கூடல் மலை திரும்புவது வழக்கம். அதன்படி கடந்த ஆடி பௌா்ணமி நாளில் திருக்கூடல்மலையிலிருந்து பல்லக்கில் புறப்பட்ட நவநீதபெருமாள் மானாமதுரை வந்தடைந்தாா். அலங்காரக்குளம் அருகே ஒருங்கிணைந்த குலாலா் சமூகத்தினருக்கு பாத்தியப்பட்ட வைகைக்கரை அய்யனாா் சோணையா சுவாமி கோயிலில் அதன் பரம்பரை நிா்வாக அறங்காவலா் வி. காளீஸ்வரன் தலைமையில் நவநீதப்பெருமாளுக்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது, சிறப்புப் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் கோயிலுக்கு வந்து நவநீதப் பெருமாளுக்கு பூஜைகள் நடத்தி தரிசனம் செய்தனா்.

அதைத்தொடா்ந்து வெள்ளிக்கிழமை வரை தொடா்ந்து 4 நாள்கள் மானாமதுரை வட்டாரத்தில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நவநீதப்பெருமாள் குதிரை, பூப்பல்லக்கு உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி பவனி வந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT