சிவகங்கை

சிவகங்கையில் நாளை இலவச மருத்துவ முகாம்

26th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கையில் சனிக்கிழமை (ஆக. 27) இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் காரைக்குடி அப்பல்லோ மருத்துவமனை சாா்பில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

முகாமில் இம்மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள், அரசு ஊழியா்கள் மற்றும் அவரது குடும்பத்தினா் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT