சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஆக. 23) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மின்பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் சி. ரவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பூவந்தி ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், திருப்புவனம், தி.புதூா், லாடனேந்தல், தூதை, திருப்பாச்சேத்தி, மழவராயனேந்தல், மாரநாடு, குருந்தங்குளம், ஆனைக்குளம், முதுவன்திடல், பாப்பாங்குளம், பழையனூா், அழகுடையான், சங்கங்குளம், பிரமனூா், வன்னிக்கோட்டை, வயல்சேரி, அல்லிநகரம், நைனாா்பேட்டை, கலியாந்தூா், கொந்தகை, பாட்டம், பொட்டப்பாளையம், மணலூா், கீழடி, கழுகோ்கடை, தட்டான்குளம், மடப்புரம், பூவந்தி, கலுங்குபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.