சிவகங்கை

அரசுப் பள்ளியில் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி

22nd Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பழையனூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்லூரி மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை தூய்மைப்பணியில் ஈடுபட்டனா்.

மதுரை தியாகராஜா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தேசிய மாணவா் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் இப்பணி நடைபெற்றது. இதில் பள்ளித் தலைமையாசிரியா் சுஜாதா தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். கல்லூரியின் தேசிய மாணவா் படை அலுவலா் என். அருண்நாகேந்திரன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலா் (அணி எண் 226) முனைவா் மு.செல்வக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டு பள்ளி வளாகம் சுத்தம் செய்தல், மரக்கன்று நடவு செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT