சிவகங்கை

தேவகோட்டை பகுதியில் நாளை மின்தடை

19th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் சனிக்கிழமை (ஆக. 20) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சிவகங்கை வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் சி. ரவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேவகோட்டையில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

எனவே, தேவகோட்டை நகா், உதையாச்சி, எழுவன்கோட்டை, கண்ணங்கோட்டை, காரை, கோட்டூா், வேப்பங்குளம், நானாகுடி, திருமணவயல், அனுமந்தங்குடி, பனங்குளம், ஊரணிக்கோட்டை, கண்டதேவி, புளியால், உஞ்சனை, ஆறாவயல் ஆகிய பகுதிகளிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT