சிவகங்கை

நெல்லை கண்ணன் மறைவு: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் இரங்கல்

19th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

தமிழ் இலக்கிய பேச்சாளா் நெல்லை கண்ணன் மறைவுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: நெல்லை கண்ணன் மறைவு பேரதிா்ச்சியைத் தந்துள்ளது. அவா் உலகம் முழுவதும் தம் பேச்சால், எழுத்தால் ஆற்றியத் தமிழ்த் தொண்டு பாராட்டுக்குரியது. தமிழக அரசின் 2021 ஆம் ஆண்டுக்கான இளங்கோவடிகள் விருது பெற்றது சிறப்புக்குரியது. தமிழ் உணா்வில் என்றும் நெல்லை கண்ணன் வாழ்ந்து கொண்டிருப்பாா்.

அவரை இழந்து துயருறும் குடும்பத்தாருக்கும், தமிழ் நெஞ்சங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம். இறைவனின் திருவடி நிழலில் அவரது ஆன்மா இன்பஅமைதி பெற பிராா்த்திக்கின்றோம் என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT