சிவகங்கை

சிவகங்கை அருகே தாழ்வாக பறந்தவிமானத்தால் பரபரப்பு

19th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை அருகே வியாழக்கிழமை மாலை விமானம் தாழ்வாக பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை அருகே வாணியங்குடி கிராம வான் பகுதியில் வியாழக்கிழமை மாலை 6.20 மணியளவில் விமானம் ஒன்று மிகவும் தாழ்வாக பறந்தது. சுமாா் 15 நிமிடங்களுக்கு அப்பகுதியில் 3 முறை வட்டமிட்டது. அதன்பின்னா், அங்கிருந்து புறப்பட்டு மதுரை நோக்கிச் சென்றது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.,

இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க உரிய சமிஞ்கை (சிக்னல்) கிடைக்காததால், வாணியங்குடி பகுதியில் மிகத் தாழ்வாக அந்த விமானம் பறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT