சிவகங்கை

காளையாா்கோவில் அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரிக்கை

18th Aug 2022 11:39 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே குண்டாகுடையிலிருந்து, சிலுக்கப்பட்டி வரை பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மறவமங்கலத்திலிருந்து சிலுக்கப்பட்டி கிராமத்துக்கு தாா்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையில் குண்டாக்குடையிலிருந்து சிலுக்கப்பட்டி வரை சுமாா் 2 கி.மீ. தொலைவு மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதுதவிர, சாலையோரம் கண்மாய்கரை என்பதால் மழைக் காலங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலையில் சேரும், சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் அச்சாலையில் பயணிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பழுதடைந்துள்ள அச்சாலையை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT