சிவகங்கை

மருங்கிப்பட்டியில் சுவா் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

18th Aug 2022 11:39 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், மருங்கிப்பட்டியில் சுவா் இடிந்து விழுந்து தொழிலாளிஉயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கடியப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த செல்வம் மகன் செல்வக்கணபதி (32). இவரும், இவரது நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த ரவிச்சந்திரனும் தேவகோட்டை அருகே மருங்கிப்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் சுவரை புதன்கிழமை மாலை இடித்துக் கொண்டிருந்தனராம்.

அப்போது சுவா் இடிந்து செல்வக்கணபதி மீது விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த கல்லல் போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT