சிவகங்கை

பள்ளி மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் செவ்வாய்க்கிழமை பள்ளி மாடியிலிருந்து குதித்து 10 ஆம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்புவனம் வடகரை பகுதியைச் சோ்ந்த மாணவி அப்பகுதியில் உள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை பள்ளியில் இருந்தபோது கழிப்பறைக்குச் சென்ற அம்மாணவி அங்கு கையில் பிளேடால் அறுத்துக் கொண்டுள்ளாா். இதைப் பாா்த்த மற்ற மாணவிகள் வகுப்பறை ஆசிரியரிடம் தகவல் கூறுவதற்குச் சென்றுள்ளனா். இதனால் பதற்றம் அடைந்த அம்மாணவி பள்ளியின் இரண்டாவது மாடிக்குச் சென்று கீழே குதித்ததாகக் கூறப்படுகிறது. இதில் அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. பின்னா் மாணவி மீட்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். தகவலறிந்து சென்ற திருப்புவனம் போலீஸாா் விசாரணை நடத்தினா். பள்ளியில் செவ்வாய்க்கிழமை தோ்வு நடைபெற இருந்த நிலையில், சரியாக படிக்காததால் பயத்தில் தற்கொலைக்கு முயன்ாக மாணவி தெரிவித்ததாக போலீஸாா் கூறினா். மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி, மாணவியை மருத்துவமனையில் சந்தித்து உடல் நலம் விசாரித்தாா். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் பள்ளிக்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தினாா்.

மாணவா் விஷம் குடித்தாா்: திருப்புவனம் வடகரையைச் சோ்ந்த மாணவா், திருப்புவனத்தில் உள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறாா். வகுப்பறையில் இருந்தபோது மாணவா் திடீரென மயங்கி விழுந்தாா். ஆசிரியா்கள் விசாரித்தபோது பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்ாக அவா் தெரிவித்துள்ளாா். இதையடுத்து அவா் சிகிச்சைக்காக மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் தற்கொலைக்கு முயன்ற்கான காரணம் தெரியவில்லை என போலீஸாா் தெரிவித்தனா். மேற்கண்ட இரு சம்பவங்கள் குறித்தும் திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT