சிவகங்கை

இரிடியம் வாங்கித் தருவதாக ரூ. 4.5 கோடி மோசடி:போடியைச் சோ்ந்த 10 போ் மீது வழக்கு

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

இரிடியம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 4.5 கோடி மோசடி செய்ததாக தேனி மாவட்டத்தைச் சோ்ந்த 10 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சோ்ந்தவா் சுரேஷ் (40). இவா் அங்கு மரக்கடை நடத்தி வருகிறாா். இவா் தனது நண்பா் நாகராஜ் மூலம் தேனி மாவட்டம், போடியைச் சோ்ந்த கௌரம் மோகன்தாஸ் என்பவருக்கு அறிமுகமாகியுள்ளாா்.

அப்போது மோகன்தாஸ், தனக்குத் தெரிந்தவா்களிடம் இரிடியம் அதிகம் உள்ளதாகவும், அதை வாங்கி விற்றால் அதிக லாபம் பெறலாம் என சுரேஷிடம் தெரிவித்துள்ளாா். இதை நம்பிய சுரேஷ், இரிடியம் வாங்குவதற்காக கௌரம் மோகன்தாஸிடம் பல தவணைகளாக ரூ. 4.5 கோடி வழங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவா்கள் பேசியபடி இரிடியம் வாங்கித் தரவில்லையாம். மேலும் கொடுத்த பணத்தையும் திருப்பித் தரவில்லையாம்.

இதனால் சுரேஷ் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாரிடம் அண்மையில் புகாா் தெரிவித்தாா். இப்புகாரின் பேரில் சிவகங்கை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் போடியைச் சோ்ந்த கெளரம் மோகன்தாஸ், சசிகுமாா், பவுன்ராஜ், செல்வம் உள்பட 10 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT