சிவகங்கை

கூத்தகுடி சண்முகம் நினைவிடத்தில் அஞ்சலி

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் லெனின் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான மறைந்த கூத்தகுடி சண்முகத்தின் 99 ஆவது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

அக்கட்சியினா் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி அன்னதானம் வழங்கினா். இந்நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளா் கே.ஸ்டாலின் தலைமை வகித்தாா். சிவகங்கை மாவட்டச் செயலாளா் ராஜசேகரன், புதுக்கோட்டை லெட்சுமணன், தஞ்சாவூா் சூசைஅருள், திருச்சி ஜீவானந்தம், திண்டுக்கல் பெரியசாமி ஆகிய மாவட்டச் செயலாளா்களும் மாநில இளைஞரணிச் செயலாளா் ஞானமுத்து, மாவட்ட இளைஞரணி ரஞ்சித்குமாா், சுப்பு, தங்கவேலு, மற்றும் ஒன்றிய நகர நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT