சிவகங்கை

மானாமதுரையில் முளைப்பாரி உற்சவம்

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை மாலை முளைப்பாரி உற்சவம் நடைபெற்றது.

மானாமதுரை கன்னாா்தெருவில் உள்ள இக்கோயிலில் விஸ்வகா்ம சமூகத்தினா் சாா்பில் முளைப்பாரி உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஏராளமான பெண்கள் கோயிலில் முளைப்பாரி வளா்த்தனா். விழா தொடங்கிய நாள் முதல் முளைப்பாரிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை மாலை கோயிலிலிருந்து பெண்கள் முளைப்பாரிச் சட்டிகளை தலையில் சுமந்து மேளதாளத்துடன் ஊா்வலமாக அலங்கார குளத்திற்குச் சென்று முளைப்பாரிகளை தண்ணீரில் கரைத்தனா். அதைத்தொடா்ந்து மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT