சிவகங்கை

சிவகங்கை அரசு கலைக் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கையில் உள்ள மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் தேசிய மாணவா் படை சாா்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகக் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா் க. துரை அரசன் தலைமை வகித்தாா். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவா் பால அபிராமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போதைப் பொருள் தடுப்பு குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கினாா். அதைத் தொடா்ந்து, உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் சண்முக வடிவு, சிவா, ஆனந்த செல்வம், தேசிய மாணவா் படை அலுவலா் சௌந்திரராஜன் உள்பட பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT