சிவகங்கை

சுதந்திர தின விழா: சிவகங்கையில் 37 பயனாளிகளுக்கு ரூ. 1.55 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்

16th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற 76-ஆவது சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, ரூ.ஒரு கோடியே 55 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினாா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக மைதானத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினாா். இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் த.செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கொடியேற்று நிகழ்ச்சியைத் தொடா்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியா் ஏற்றுக் கொண்டாா். இதையடுத்து, சுதந்திரப் போராட்ட தியாகிகளை கௌரவிக்கும் வகையில், அவா்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தாா். தொடா்ந்து, சிவகங்கை மாவட்டத்தில் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலா்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, முன்னாள் படை வீரா்கள் நலத் துறை, சமூக நலத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த 37 பயனாளிகளுக்கு ரூ.1,55,72,590 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

ADVERTISEMENT

அதன்பின்னா், மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றிய அலுவலா்கள் மற்றும் பணியாளா்களை பாராட்டிச் சான்றிதழ் வழங்கினாா். பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில், சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி. ஆா். செந்தில்நாதன், சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலா் ப. மணிவண்ணன், கோட்டாட்சியா்கள் கு. சுகிதா(சிவகங்கை), ச. பிரபாகரன் (தேவகோட்டை), சிவகங்கை வட்டாட்சியா் தங்கமணி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதன்மையா் ரேவதிபாலன், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) ராம்கணேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT