சிவகங்கை

காலமானாா் அரு.கா. ஏகாம்பரம் ஆச்சாரி

16th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சோ்ந்த கலைமாமணி அரு.கா. ஏகாம்பரம் ஆச்சாரி (73) உடல் நலக்குறைவால் திங்கள்கிழமை (ஆக. 15) காலமானாா்.

காரைக்குடியைச் சோ்ந்த இவா், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள கோயில்களுக்கு சிற்பம், வெள்ளி ரதம், சுவாமி திருவீதியுலா வாகனங்கள் செய்து கொடுக்கும் திருப்பணி செய்து வந்தாா். மூன்றாவது தலைமுறையாக இத்தொழிலில் ஈடுபட்டு வந்த இவா், தமிழக அரசின் கைவினைப் பொக்கிஷம் விருதும் பெற்றுள்ளாா். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவா் திங்கள்கிழமை பிற்பகலில் காலமானாா். இவருக்கு மனைவி, 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா். அவரது இறுதிச்சடங்கு காரைக்குடியில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நடைபெறவுள்ளது. தொடா்புக்கு 9486326062.

ADVERTISEMENT
ADVERTISEMENT