சிவகங்கை

காரைக்குடியில் சுதந்திர தின விழா

16th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, சிவகங்கை மக்களவை உறுப்பினா் காரைக்குடியில் உள்ள எம்.பி அலுவலகத்தில் காா்த்தி சிதம்ரம் எம்.பி, காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்றத்தலைவா் சே. முத்துத்துரை ஆகியோா் தேசியக்கொடியேற்றினா்.

அழகப்பா பல்கலைக்கழக நிா்வாக அலுவலகத்தில் துணைவேந்தா் பொறுப்புக்குழு உறுப்பினா் ஆா். சுவாமிநாதன் முன்னிலையில் மற்றொரு உறுப்பினா் சு.கருப்புச்சாமி தேசியக்கொடி ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினாா். விழாவில் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினா்கள் சங்கரநாராயணன், குணசேகரன், பதிவாளா் (பொறுப்பு) சு. ராஜமோகன், தோ்வானையா் (பொறுப்பு) கண்ணபிரான், நிதி அலுவலா் ஆா். பாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தில் (செக்ரி) மூத்த ஆராய்ச்சியாளா் சரஸ்வதி, அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் அதன் முதல்வா் அ. பெத்தாலெட்சுமி, அழகப்பச்செட்டியாா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில் முதல்வா் பி.கே. பழனி, காரைக்குடி எஸ்.ஆா். கல்வி நிறுவனத்தில் தாளாளா் ராஜாமுகமது உள்ளிட்டோா் தேசியக் கொடியை ஏற்றினா்.

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழுத் தலைவா் சண்முகவடிவேல் கொடியேற்றி வைத்தாா். மருதுபாண்டியா்கள் நினைவிடத்தில் வாரிசுதாரா் ராமசாமி தலைமையேற்க பேரூராட்சி மன்றத் தலைவா் கோகிலாராணிநாராயணன் கொடியேற்றினா். ஒளிப்பதிவாளா்கள் மற்றும் புகைப்பட நலச் சங்கம் சாா்பில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் இந்திய ராணுவ வீரா் காா்த்திகேயன் கொடியேற்றினாா். திருப்பத்தூா் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவா் சதாத்துநிஷா கொடியேற்றினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT