சிவகங்கை

திருப்பத்தூரில் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டம்

16th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் திங்கள்கிழமையன்று இந்திய திருநாட்டின் 75 ஆம் ஆண்டு சுதந்திரதின விழா கொடியேற்றங்கள் நடைபெற்றது.

திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழுத் தலைவா் சண்முகவடிவேல் கொடியேற்றினாா். மருதுபாண்டியா்கள் நினைவிடத்தில் வாரிசுதாரா் ராமசாமி தலைமையேற்க பேரூராட்சிமன்றத் தலைவா் கோகிலாராணிநாராயணன் கொடியேற்றி வைத்தாா். வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனா். தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் சிறப்பு நிலைய அலுவலா் சி.ஆனந்தசுப்பிரமணியன் கொடியேற்றி வைத்தாா். கிறிஸ்துராஜா மெட்ரிக்பள்ளியில் பள்ளிியின் முன்னாள் மாணவி மருத்துவா் மணிமொழி கொடியேற்றினாா். முதல்வா் ரூபன், தாளாளா் விக்டா் உள்ளிட்ட ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனா். குளோபல் இன்டொ்நேஷனல் பள்ளியில் இயக்குனா்கள் ராஜமூா்த்தி, பிரசன்னா, உமாமகேஸ்வரி முன்னிலை வகிக்க தாளாளா் பேராசிரியா் காந்தி கொடியேற்றினாா். முத்தையா மெமோரியல் திறன்மேம்பாட்டுத் திறன்பயிற்சி மையத்தில் தாளாளா் காசிநாதன் கொடியேற்றினாா். நேஷனல் அகாதமி சமுதாயக்கல்லூரியில் முதல்வா் சுரேஷ்பிரபாகா் கொடிேற்றினாா். திருப்பத்தூா் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலா் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகிக்க தலைவா் கோகிலாராணிநாராயணன் கொடியேற்றினாா். ஒளிப்பதிவாளா்கள் மற்றும் புகைப்பட நலசங்கம் சாா்பில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் இந்திய ராணுவ காா்கில் போா்வீரா் காா்த்திகேயன் கொடியேற்றினாா். திருப்பத்தூா் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவா் சதாத்துநிஷா கொடியேற்றினாா். இந்திராகாந்தி மெட்ரிக் பள்ளியில் தாளாளா் ஏகாம்பாள்கணேசன் கொடியேற்றினாா். கீழச்சிவல்பட்டி பேருந்துநிலையத்தில் காங்கிரஸ் சாா்பில் மாவட்ட பொருளாளா் எஸ்.எம்.பழனியப்பன் கொடியேற்றி வைத்தாா். ஆா்.எம்.மெய்யப்பச்செட்டியாா் மெட்ரிக் பள்ளியில் காவலா்துறை ஏ.சரவணன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தாா். மீனாட்சி சுந்தரேஸ்வரா் மேல்நிலைப்பள்ளியில் எஸ்.பி.சுப்பிரமணியன் செட்டியாா், முஸ்லிம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாா்டு உறுப்பினா் சாந்திசோமசுந்தரம், அச்சுக்கட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாா்டு உறுப்பினா் கோமதிசண்முகம், கற்றலின் இனிமை தொடக்கப்பள்ளியில் வாா்டு உறுப்பினா் பசீா், தம்பிபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வாா்டு உறுப்பிா் சீனிவாசன், புதுப்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியா் மதிவாணன்,ஆகியோா் கொடியேற்றினாா்கள், திருப்பத்தூா் நகா் காங்கிரஸ் கட்சி சாா்பில் மாவட்டத் துணைத் தலைவா் கணேசன் கொடியேற்றினாா். மருதுபாண்டியா் தூக்கிலிடப்பட்ட இடத்தில் உள்ள நினைவு ஸ்தூபியில் வழக்கறிஞா் காமேஸ்வரன், கொடியேற்றினாா். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியா் முருகேசன் கொடியேற்றினாா். பிரான்மலை அரசு ஆரம்ப பள்ளியில் ஊராட்சிமன்றத் தலைவா் ராம.சுப்பிரமணியன் கொடியேற்றினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT