சிவகங்கை

அகரம் அகழாய்வில் உறைகிணறு கண்டுபிடிப்பு

14th Aug 2022 12:10 AM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அகரத்தில் நடைபெற்று வரும் அகழாய்வில் சனிக்கிழமை சாய்ந்த நிலையில் மற்றொரு உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது.

கீழடியில் 8 ஆம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இதன் தொடா்ச்சியாக அருகேயுள்ள அகரம், கொந்தகை, மணலூா் உள்ளிட்ட இடங்களிலும் அகழாய்வு விரிவுப்படுத்தப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில், கொந்தகையில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கிடைத்து வருகின்றன. சமீபத்தில் ஒரு முதுமக்கள் தாழியிலிருந்து ஏராளமான சூது, பவளமணிகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், அகரத்தில் நடந்து வரும் அகழாய்வில் ஏற்கெனவே ஒரு உறைகிணறு கண்டறியப்பட்ட நிலையில், தற்போது மற்றொரு அகழாய்வு குழியிலிருந்து சாய்ந்த நிலையில் உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உறைகிணற்றில் தற்போது இரண்டு அடுக்கு வெளியே தெரிகிறது. இந்த குழியின் உயரத்தை அதிகப்படுத்தும் போது அந்த உறைகிணற்றின் மற்ற அடுக்குகள் வெளியே தெரியும் என அகழாய்வாளா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT