சிவகங்கை

கல்லல் பகுதியில் ஆக. 16 இல் மின் தடை

14th Aug 2022 12:10 AM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஆக.16) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்குடி மின் செயற்பொறியாளா் எம். லதாதேவி தெரிவித்திருப்பதாவது: காரைக்குடி அருகே கல்லல் துணைமின்நிலையத்தில் வரும் செவ்வாய்க்கிழமை (ஆக. 16) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே, கல்லல், குறுந்தம்பட்டு, அரண்மனைசிறுவயல், மாலை கண்டான், வெற்றியூா், சாத்திரசம்பட்டி, கெளரிப்பட்டி, பாகனேரி, பனங்குடி, நடராஜபுரம், கண்டிப்பட்டி, செம்பனூா், செவரக்கோட்டை, சொக்கநாதபுரம், கீழக்கோட்டை ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT