சிவகங்கை

சிவகங்கை மன்னா் மேல்நிலைப் பள்ளியின் 167- ஆவது ஆண்டு தொடக்க விழா

14th Aug 2022 12:11 AM

ADVERTISEMENT

 

சிவகங்கையில் உள்ள மன்னா் மேல்நிலைப் பள்ளியின் 167-ஆவது ஆண்டு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பள்ளியின் முகவாண்மை குழுத் தலைவா் ராணி டி.எஸ்.கே. மதுராந்தகி நாச்சியாா் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றி வைத்தாா். அதன்பின், தேசிய மாணவா் படை மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

தொடா்ந்து, சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்திய அவா், மாணவ, மாணவிகளுக்கு 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி தேசியக் கொடியினை வழங்கினாா். இதில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

விழாவில், மன்னா் கல்வி நிறுவனங்களின் செயலா் வி.எஸ். குமரகுரு, பள்ளியின் தலைமையாசிரியா் என். சுந்தரராஜன் உள்ளிட்ட ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT