சிவகங்கை

சிவகங்கை அரசுப் பள்ளிக்கு ரூ. 58 லட்சம் நிதியுதவி வழங்கல்

14th Aug 2022 12:10 AM

ADVERTISEMENT

 

சிவகங்கையில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 4 கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ. 58 லட்சம் நிதியுதவிக்கான ஆணையினை முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப. சிதம்பரம் சனிக்கிழமை வழங்கினாா்.

சிவகங்கையில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 4 கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு தனது நாடாளுமன்ற உறுப்பினா் நிதியிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் ரூ. 58 லட்சம் வழங்கியுள்ளாா். இதையடுத்து, அப்பள்ளிக்கு சனிக்கிழமை மாலை வருகை தந்த அவா், நிதி ஒதுக்கீடு செய்து வழங்கியதற்கான கடிதத்தை பள்ளி தலைமையாசிரியா் சிவமணியிடம் நேரடியாக வழங்கினாா்.

அப்போது சிவகங்கை நகா் மன்றத் தலைவா் சி.எம். துரை ஆனந்த், துணைத் தலைவா் காா்கண்ணன் உள்பட ஆசிரிய, ஆசிரியைகள் ஏராளமானோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT