சிவகங்கை

திருப்பத்தூரில் மருதுபாண்டியா்கள் உருவச்சிலைக்கு மாநில பாஜக தலைவா் அண்ணாமலை மரியாதை

14th Aug 2022 12:12 AM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருதுபாண்டியா்கள் நினைவிட மணிமண்டபத்திலுள்ள அவா்களது உருவச்சிலைகளுக்கு பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நாட்டின் 75 ஆவது சுதந்திரதின அமுதப் பெருவிழாவையொட்டி திருப்பத்தூா் நான்குரோடு அருகே இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜகவினா் மாவட்டத் தலைவா் மேப்பல் சக்தி தலைமையில் தேசியக் கொடியேந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக வந்தனா். பின்னா் சுதந்திரப் போராட்ட வீரா்களான மாமன்னா் மருதுபாண்டியா்கள் தூக்கிலிடப்பட்ட இடத்தில் உள்ள நினைவுத்தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பின்னா் அங்கிருந்து மதுரை சாலை வழியாக அண்ணாசிலை வந்தடைந்தனா். அங்கு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை, கட்சித் தொண்டா்களுடன் ஊா்வலத்தில் கலந்து கொண்டு மருதுபாண்டியா்களின் நினைவிட மணிமண்டபத்தில் உள்ள மருதிருவா்களின் உருவச்சிலைகளுக்கு மாலையணிவித்து, மரியாதை செலுத்தினாா். இதில் மாநில பொதுச் செயலா் பொன்பாலகணபதி, பெருங்கோட்ட அமைப்புச் செயலா் சுப. நாகராஜன், கோட்டப் பொறுப்பாளா் கதலிநரசிங்கப்பெருமாள், மாநில உள்ளாட்சி பிரிவுத் தலைவா் சோழன்பழனிச்சாமி, மாவட்ட பொதுச் செயலா்கள் முருகேசன், மாா்த்தாண்டன், நாகராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெயபால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT