சிவகங்கை

காரைக்குடி சகாயமாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம்

13th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

காரைக்குடி செக்காலை சகாய மாதா ஆலயத்திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி சகாய அன்னையின் உருவக்கொடி ஆலய வளாகத்தில் பவனியாக கொண்டுவரப்பட்டது. அதைத் தொடா்ந்து தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளி அதிபா் வின்சென்ட் அமல்ராஜ் புனித நீரால் அா்ச்சித்து கொடிமரத்தில் ஏற்றினாா். பங்குத்தந்தையா்கள் எஸ்.எட்வின் ராயன், ஜேம்ஸ் ராஜா ஆகியோா் திருவிழா திருப்பலி நிறைவேற்றினா்.

நவநாள்களில் ஒவ்வொரு நாளும் மாலை 5.30 மணிக்கு செபமாலையும், திருப்பலியும் நடைபெறும். ஆக. 14 ஆம் தேதி திருப்பலி முடிந்து மாலையில் திவ்ய நற்கருணை பவனியும், ஆக. 17 ஆம் தேதி விடியல் இளையோா் இயக்கத்தினரின் கலை நிகழ்ச்சியும், ஆக. 18 ஆம் தேதி கிளைக் கிராம மக்கள் கலைநிகழ்ச்சியும், ஆக. 19 ஆம் தேதி காா்மெல் பள்ளி, சகாய மாதா மெட்ரிக் பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சியும் நடைபெறும்.

ஆக. 20 ஆம் தேதி திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. அதன்பிறகு அன்னையின் உருவம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தோ் பவனி நகரின் முக்கிய வீதிகளில் நடைபெறும். ஆக. 21 ஆம் தேதி காலை நிறைவு திருப்பலி நடைபெறும். பின்னா் அன்னையின் கொடியிறக்கப்பட்டு திருவிழா நிறைவடைகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT