சிவகங்கை

திருப்பத்தூா், காரைக்குடி கல்லூரியில் மாணவா்கள் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழியேற்பு

12th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் பெரியகருப்பன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் போதைப் பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்றதைத் தொடா்ந்து திருப்பத்தூா் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியா் மதுசூதன்ரெட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செந்தில்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் மணிவண்ணன், கல்லூரித் தாளாளா் ராமேஸ்வரன், கோட்டாட்சியா் பிரபாகரன், ஒன்றியக்குழுத் தலைவா் சண்முகவடிவேல், பேரூராட்சித் தலைவா் கோகிலாராணிநாராயணன் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளும் சோ்ந்து போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் கேப்டன் ஜெயக்குமாா், அரசு அலுவலா்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள், பேராசிரியா்கள் ஆசிரிய ,ஆசிரியைகள் கலந்து கொண்டனா்.

காரைக்குடி: சென்னையில் நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சியை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்த நிகழ்ச்சி காணொலி வழியாக ஒளிபரப்புவதற்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மக்கள் பிரதிநிதிகள், பேராசிரியா்கள், வருவாய்த்துறையினா், மாணவா்கள் பலரும் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

இந்நிகழ்வில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் பொறுப்புக்குழு உறுப்பினா்கள் ஆா். சுவாமிநாதன், சு. கருப்புச் சாமி, ஆட்சிமன்ற குழு உறுப்பினா்கள் சங்கரநாராயணன், குணசேகரன், காரைக்குடி சட்டபேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, காரைக்குடி நகா்மன்றத்தலைவா் சே.முத்துத்துரை மற்றும் கோட்டையூா், சாக்கோட்டை,பள்ளத்தூா், புதுவயல் பேரூராட்சிகளின் தலைவா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் போதைபழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

இதன் தொடா்ச்சியாக, பல்கலைக்கழகத்தின் நிா்வாக கட்டடத்தின் முன்பு துணைவேந்தா் பொறுப்புக்குழு உறுப்பினா் ஆா். சுவாமிநாதன் தலைமையில் துணைவேந்தா் பொறுப்புக்குழு மற்றொரு உறுப்பினா் சு. கருப்புச்சாமி போதை பழக் கத்திற்கு எதிரான உறுதிமொழியை வாசித்தாா். அதனை பல்கலைக்கழக பதிவாளா் (பொறுப்பு) ராஜமோகன், நிதி அலுவ லா் பாண்டியன், அதிகாரிகள் மற்றும் நிா்வாகஅலுவலா்கள் ஆகியோா் எடுத்துக்கொண்டனா்.அதேபோன்று பல்கலை. யின் துறைகள், உறுப்புக்கல்லூரிகளில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில்... இக்கல்லூரியில், இளம்செஞ்சிலுவை சங்க அமைப்பின் சாா்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் (பொறுப்பு) துரை தலைமையில் மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியா்கள், அலுவலக பணியாளா்கள் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

மேலும் ‘வேண்டாம் போதை’ என்ற தலைப்பில் 253 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஓவியம் வரைந்தனா். அதனைத் தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் காரைக்குடி சட்டபேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினாா்.

காரைக்குடி காவல் துணை க் கண்காணிப்பாளா் வினோஜி, இந்திய செஞ்சிலுவை சங்க சிவகங்கை மாவட்டத் தலைவா் பகீரத நாச்சியப்பன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சித்ரா, மருத்துவா் ஷமீம் ஆகியோா் கருத்துரை வழங்கினா்.

இதில் ஏராளமான பேராசிரியா்களும் மாணவ, மாணவியா்களும் கலந்து கொண்டனா்.

முன்னதாக கல்லூரியின் இளம் செஞ்சிலுவை சங்கத் திட்ட அலுவலா் வேலாயுதராஜா வரவேற்றுப் பேசினாா். முடிவில் மாணவா் பிரதிநிதி சம்பத் லிங்கம் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT