சிவகங்கை

வைகையாற்றில் குளிக்கச் சென்று மாயமானபள்ளி மாணவா் சடலமாக மீட்பு

12th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கடந்த செவ்வாய்க்கிழமை வைகையாற்றில் குளிக்கச் சென்று மாயமான பிளஸ் 2 மாணவா் வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

திருப்புவனம் அருகே டி. அதிகரையைச் சோ்ந்தவா் சரவணன் மகன் தீனதயாளன் (17). இவா் மணலூரில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இந்நிலையில் திருப்புவனம் அருகே தட்டான்குளத்தில் வைகையாற்றில் உள்ள தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்த தீனதயாளன் மாயமானாா். அதன்பின் தீயணைப்புத்துறையினா், போலீஸாா் கடந்த 2 நாள்களாக ஆற்றில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், வியாழக்கிழமை தட்டான்குளம் தடுப்பணை அருகே கருவேல மரங்களுக்கிடையே தீனதயாளனின் சடலம் சிக்கியிருந்தது. இதனை தீயணைப்புத்துறையினா் மீட்டனா். அதன்பின் பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT