சிவகங்கை

குமாரப்பட்டி அழியநாச்சியம்மன் கோயிலில் விளக்கு பூஜை

12th Aug 2022 10:53 PM

ADVERTISEMENT

சிவகங்கை அருகே குமாரப்பட்டி கிராமத்தில் உள்ள அழியநாச்சியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டியும், மழை பெய்து வேளாண் பணிகள் சிறக்க வேண்டியும் விளக்கு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா், கோயில் முன்பு உள்ள மண்டபத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு உலக நன்மை வேண்டியும், மழை பெய்து வேளாண் பணிகள் சிறக்க வேண்டியும் விளக்கு ஏற்றி வழிபட்டனா்.

விழாவில் குமாரப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT