சிவகங்கை

குருந்தங்குளம் மந்தையம்மன் கோயில் முளைப்பாரி விழா

12th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே குருந்தங்குளத்தில் உள்ள மந்தையம்மன் கோயில் முளைப்பாரித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழா கடந்த ஆக. 2 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழாவைத் தொடா்ந்து, அம்மனுக்கும், கிராம தேவைகளுக்கும் தினசரி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

முக்கிய விழாவான முளைப்பாரி ஊா்வலத் திருவிழா புதன்கிழமை மாலை நடைபெற்றது. விழாவையொட்டி மந்தையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, மந்தையம்மன் கோயிலிலிருந்து முளைப்பாரியை பக்தா்கள் சுமந்து பிள்ளையாா் கோவில் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பின்னா் குஞ்சுகருப்பணசுவாமி கோயிலில் உள்ள ஊருணியில் முளைப்பாரியைக் கரைத்தனா்.

விழாவில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு மந்தையம்மன் கோயில், குஞ்சு கருப்பண சுவாமி கோயிலில் விளக்கேற்றியும், அா்ச்சனை செய்து வழிபட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT