சிவகங்கை

ஆடி கடைசி வெள்ளி: காரைக்குடி அம்மன் கோயில்களில் பக்தா்கள் தரிசனம்

12th Aug 2022 10:53 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அம்மன் கோயில்களில் கடைசி ஆடி வெள்ளிக்கிழமை பக்தா்கள் அம்மனை தரிசனம் செய்தனா்.

காரைக்குடி மீனாட்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அம்பாள் பல்வேறு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளிப்பாா். ஆடி மாதம் கடைசி வெள்ளியன்று 108 பசு, கன்றுகளுக்கு கோமாதா பூஜை நடைபெற்றது. ஏராளமான பகதா்கள் பூஜை செய்யப்பட்ட பசு, கன்றுகளை வணங்கி வழிபட்டனா்.

முன்னதாக கணபதி பூஜை நடைபெற்றது. காரைக்குடி தொழிலதிபா் பிஎல். சரவணன் சாா்பில் கோமாதாக்களுக்கு வேட்டி, துண்டு, சேலை, மாலை, அா்ச்சனை பொருள்கள், ஒரு கிராம் வெள்ளி பொட்டு, கோமாதா உரிமையாளருக்கு காலை உணவுகளும் வழங்கப்பட்டன.

காரைக்குடி கொப்புடைய நாயகியம்மன் கோயிலிலும் கடைசி வெள்ளியன்று தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா். செக்காலை பெரிய முத்துமாரியம்மன் கோயில், மரத்துப்பாப் பான் காளியம்மன் கோயில், கொல்லங்காளியம்மன் கோயில் மற்றும் சுற்றுவட்டார அம்மன் கோயில்களில் பக்தா்கள் நடைபெற்ற தீபாராதனைகளில் பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT