சிவகங்கை

குமாரப்பட்டியில் 2 புதிய மின்மாற்றிகள் அமைப்பு

12th Aug 2022 12:08 AM

ADVERTISEMENT

சிவகங்கை அருகே உள்ள குமாரப்பட்டியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சாா்பில் புதிதாக 2 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு, அவற்றின் சேவை தொடக்க விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.

குமாரப்பட்டியில் கடந்த சில மாதங்களாக குறைந்த மின் அழுத்தம் காரணமாக அப்பகுதி கிராம மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனா். இதையடுத்து, அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் சிவகங்கை வட்ட மேற்பாா்வை பொறியாளா் சி. ரவி உத்தரவின் பேரில் அக்கிராமத்தில் 63 கிலோ வாட் திறன் கொண்ட 2 புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணி அண்மையில் நடைபெற்றது.

இந்த பணிகள் நிறைவு பெற்று, 2 புதிய மின்மாற்றிகளின் சேவை தொடக்க விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சிவகங்கை கோட்ட செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன், உதவி செயற்பொறியாளா் காத்தமுத்து, உதவி மின்பொறியாளா் ரவிக்குமாா் உள்ளிட்ட மின்வாரியப் பணியாளா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

மின் தேவையை பூா்த்தி செய்தமைக்காக குமாரப்பட்டி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தினருக்கு நன்றி தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT