சிவகங்கை

கட்டிக்குளம் சுட்டுக்கோல்மாயாண்டி சுவாமிகள் அவதார விழா

12th Aug 2022 12:09 AM

ADVERTISEMENT

மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் 165 ஆவது அவதார விழா அவரது கருப்பனேந்தல் மடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி புனிதநீா் கலசங்களை வைத்து மாயாண்டி சுவாமிகள் சன்னதி முன்பு சிறப்பு யாக வேள்வி நடத்தப்பட்டது. குலால சமுதாய சிவாச்சாரியாா்கள் யாகத்தை நடத்தினா்.

பூா்ணாஹூதி முடிந்து தீபாராதனை காட்டப்பட்டதும், கலசநீராலும் அபிஷேகப் பொருள்களாலும் மாயாண்டி சுவாமிகளுக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் மாயாண்டி சுவாமிகளை தரிசனம் செய்தனா். மேலும் கருப்பனேந்தல் மடத்தில் மாயாண்டி சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மகாகணபதி, முருகன் சன்னதிகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தில் ஏராளமானோா் பங்கேற்றனா். இரவு பூப்பல்லக்கில் மாயாண்டி சுவாமிகள் உருவம் வீதி உலா நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT