சிவகங்கை

இலுப்பகுடி இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில் ஆயுதக் கண்காட்சி

11th Aug 2022 02:26 AM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டம், இலுப்பகுடியில் உள்ள இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில் ஆயுதக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

நாட்டின் 75- ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற இக்கண்காட்சியை இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்புப் படை டிஐஜி ஆச்சல் சா்மா தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். கண்காட்சியில் ராணுவ வீரா்கள் பயன்படுத்தும் கைத்துப்பாக்கி முதல் உயர்ரக ஏவுகணை அழிப்பு ஆயுதம் வரை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இதனைப் பயன்படுத்தும் விதம் குறித்து பாதுகாப்புப் படை வீரா்கள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளித்தனா். மேலும், மலையேற்றம், போரில் காயமடைந்தவா்களை மீட்பது குறித்தும் வீரா்கள் விளக்கம் அளித்தனா்.

ADVERTISEMENT

இதனை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பாா்வையிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT