சிவகங்கை

வைகையில் மூழ்கிய மாணவரை தேடும் பணி நீடிப்பு

11th Aug 2022 02:20 AM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவரை இரண்டாவது நாளாக புதன்கிழமை மாலை வரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

திருப்புவனம் அருகேயுள்ள டி.அதிகரையைச் சோ்ந்த சரவணன் மகன் தீனதயாளன் (17). இவா் மணலூரில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை திருப்புவனம் தட்டான்குளம் தடுப்பு அணை அருகே குளித்து கொண்டிருந்தபோது இழுத்துச் செல்லப்பட்டாா். பூவந்தி போலீஸாா் மற்றும் மானாமதுரை தீயணைப்பு நிலைய அலுவலா் குமரேசன் தலைமையிலான வீரா்கள் தேடும்பணியில் ஈடுபட்டனா்.

இரவு என்பதால் புதன்கிழமை தேடுவது என முடிவு செய்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனா். புதன்கிழமை காலையில் மாணவரை தேடும் பணி தொடங்கியது. இதில் தீயணைப்புத் துறையினா், போலீஸாா் மற்றும் நீச்சல் தெரிந்த இளைஞா்கள் ஈடுபட்டனா். ஆனால் மாலை வரை தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. வியாழக்கிழமையும் தேடும் பணி தொடரும் என போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT