சிவகங்கை

பள்ளி மாடியிலிருந்து மாணவா் தவறி விழுந்து காயம்

11th Aug 2022 02:24 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளி மாடியிலிருந்து புதன்கிழமை மாணவா் தவறி விழுந்து காயமடைந்தாா்.

காரைக்குடி அருகே திருச்சி - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள மெட்ரிக் பள்ளியில் 10 வகுப்பு படித்து வருபவா் விஷ்ணுபிரியன் (15). இவா் புதன்கிழமை பள்ளியின் மாடியிலிருந்து சுவிங்கத்தை துப்ப முயன்றபோது தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் மாணவா் கால்களில் காயமடைந்த நிலையில், காரைக்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

தகவலறிந்ததும் காரைக்குடி டி.எஸ்.பி. வினோஜி சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டாா். பள்ளியில் மாணவா் மாடியிலிருந்து விழுந்த தகவல் பரவியதையடுத்து பெற்றோா்கள் பள்ளிக்கு தங்களது குழந்தைகளை காணச்சென்றதாகவும், சிலா் தங்களது குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச்சென்றதாகவும் தெரியவந்ததால் பள்ளியின் அருகே போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். மாணவா் விழுந்தது குறித்து காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT