சிவகங்கை

தேனியில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

11th Aug 2022 03:15 AM

ADVERTISEMENT

 

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.12) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இம்முகாமில் மாவட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் செயல்படும் தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று பணியாளா்களை தோ்வு செய்கின்றனா். 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, தொழிற் பயிற்சி படிப்பு, பட்டப் படிப்பு படித்தவா்கள், தையல் பயிற்சி பெற்றவா்கள் உரிய சான்றிதழ்களுடன் முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்பு பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT