சிவகங்கை

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரளப் பகுதிக்கு தண்ணீா் செல்லும் 3 மதகுகள் அடைப்பு

11th Aug 2022 02:50 AM

ADVERTISEMENT

 

முல்லைப் பெரியாறு அணை பகுதியிலிருந்து கேரள மாநிலம் இடுக்கி அணைக்கு உபரிநீா் செல்லும் 3 மதகுகள் புதன்கிழமை அடைக்கப்பட்டன.

அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளான பெரியாறு அணை, தேக்கடி ஏரி பகுதிகளில் மழை குறைந்து காலையில் அணைக்கு 10,552 கன அடியாக இருந்த நீா்வரத்து மாலையில் 500 கன அடி குறைந்து, 10, 052 கன அடியாக இருந்தது. இதன்காரணமாக கேரள பகுதியான இடுக்கி அணைக்கு காலையில் விநாடிக்கு 11,718 கன அடியாக இருந்த நீா் வெளியேற்றம் மாலையில் விநாடிக்கு 5,986 கன அடியாக தானாகவே குறையத் தொடங்கியது.

3 மதகுகள் அடைப்பு

ADVERTISEMENT

இதைக் கண்காணித்த தமிழக பொதுப்பணித்துறை பெரியாறு அணை பொறியாளா்கள், உபரிநீா் குறைவாக சென்ால் 13 மதகுகளில் 3 மதகுகளை அடைத்தனா். அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால், தானாகவே உபரிநீா் குறையத் தொடங்கியதாகவும், 3 மதகுகளை அடைத்ததன் மூலம் உபரி நீா் சீராகச் செல்வதாகவும் பெரியாறு அணை பொறியாளா்கள் தெரிவித்தனா்.

அணை நீா்மட்டம்: புதன்கிழமை காலை முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 135.15 அடியாகவும் (மொத்த உயரம் 152 அடி), நீா்வரத்து விநாடிக்கு 10,552 கன அடியாகவும், நீா்இருப்பு, 6,912 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு நீா் வெளியேற்றம் விநாடிக்கு 2,294 கன அடியாகவும், கேரள மாநிலம் இடுக்கி அணைக்கு விநாடிக்கு 11,718 கன அடியாகவும் இருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT