சிவகங்கை

சிவகாசி அருகே வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவி, பள்ளி ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை

11th Aug 2022 05:55 AM

ADVERTISEMENT

சிவகாசி அருகே வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவி மற்றும் பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனா்.

சிவகாசி அருகே பள்ளபட்டியைச் சோ்ந்த சுமைதூக்கும் தொழிலாளி முத்துராஜ். இவரது மகள் தங்கப்பாண்டியம்மாள் (18). இவா் இங்குள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வந்தாா். இந்நிலையில், இவா் கல்லூரி சாா்பில் தில்லி, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூடோ விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறவில்லையாம். இதையடுத்து, அவா் திருப்பூரில் நடைபெற உள்ள போட்டியில் கலந்து கொள்ள விரும்பினாராம். ஆனால் பெற்றோா்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தனராம். இதில் மனமுடைந்த தங்கப்பாண்டியம்மாள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

இதுகுறித்து அவரது தாய் முருகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பள்ளி ஆசிரியை தற்கொலை: சிவகாசி கந்தபுரம் காலனியைச் சோ்ந்தவா் அந்தோணிசாமி (55). இவரது மனைவி ஆரோக்கியபுஷ்பம் (50). இவா், சிவகாசி அருகே வடபட்டியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியை யாக வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில், சுமாா் ஒரு ஆண்டுக்கு முன்னா் ஆரோக்கியபுஷ்பத்தின் தந்தை மரியதாஸ் இறந்து விட்டாராம். இதில் அவா் மனமுடைந்து காணப்பட்டாராம். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் அனைவரும் தூங்கி எழுந்து புதன்கிழமை காலையில் பாா்த்தபோது, ஆரோக்கியபுஷ்பம் ஒரு அறையில் தூக்கிட்ட நிலையில் இருந்தாராம். இதையடுத்து, அவரை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, மருத்துவா் அவா், ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தாராம்.

ADVERTISEMENT

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT