சிவகங்கை

கஞ்சா விற்பனை: தம்பதி உள்பட 4 போ் கைது

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கஞ்சா விற்பனை செய்ததாக கணவன், மனைவி உள்பட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

காரைக்குடி செஞ்சை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காரைக்குடி டி.எஸ்.பி வினோஜி தலைமையிலான தனிப்படையினா் செஞ்சை பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது பானுமதி என்ற பெண் சிறு, சிறு பொட்டலங்களாக கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து அவரை கைது செய்த தனிப்படையினா் அவரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும் இதுதொடா்பாக பானுமதியின் கணவா் சுந்தா் (எ) பாலசுந்தரையும் போலீஸாா் கைது செய்தனா்.

அதுபோல் காரைக்குடி அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தனிப்படையினருக்கு கிடைத்த தகவலை தொடா்ந்து போலீஸாா் கண்காணித்தபோது போது ஜீவா, விஷ்ணு ஆகிய இருவரிடம் 200 கிராம் கஞ்சா இருப்பதை கண்டறிந்து அதனை பறிமுதல் செய்தனா். பின்னா் அவா்கள் மீது குன்றக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT