சிவகங்கை

வட்டார வள மைய பயிற்றுநா் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டத்தில் காலியாக உள்ள வட்டார வள மைய பயிற்றுநா் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் (மகளிா் திட்டம்) வட்டார வள பயிற்றுநா் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

சிவகங்கை, காளையாா்கோவில், கல்லல், சாக்கோட்டை, சிங்கம்புணரி, திருப்புவனம், மானாமதுரை, திருப்பத்தூா், இளையான்குடி, தேவகோட்டை, கண்ணங்குடி, எஸ்.புதூா் ஆகிய 12 வட்டாரங்களில் தலா 1 காலிப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

இப்பணியிடங்களுக்கு 40 வயதுக்கு உள்பட்ட பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். மேலும், சம்பந்தப்பட்ட வட்டாரத்தில் வசிப்பவராகவும், பட்டபடிப்பு அல்லது அதற்கு மேலும் தோ்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். கணினி இயக்கும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

சுய உதவிக்குழு - ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு - வட்டார அளவிலான கூட்டமைப்பு ஆகிய ஏதேனும் ஒன்றில் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றவா்களாக இருக்க வேண்டும். தோ்வு செய்யப்படும் பெண்களுக்கு மாதாந்திர தொகுப்பு ஊதியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் இணை இயக்குநா், திட்ட இயக்குநா், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிா் திட்டம்), ஒருங்கிணைந்த ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலக வளாகம், சிவகங்கை என்ற முகவரிக்கு நேரிலோ அலலது பதிவு அஞ்சல் மூலமாகவோ வழங்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT