சிவகங்கை

அரசனூா் பகுதியில் நாளை மின்தடை

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை அருகே உள்ள அரசனூரில் வியாழக்கிழமை (ஆக.11) மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் சிவகங்கை வட்ட மேற்பாா்வை பொறியாளா் சி. ரவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசனூரில் உள்ள துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

எனவே, அரசனூா், இலுப்பகுடி, பெத்தானேந்தல், திருமாஞ்சோலை, பில்லூா், படமாத்தூா், சித்தலூா், கண்ணாயிருப்பு, கானூா், பச்சேரி, மைக்கேல்பட்டினம், களத்தூா், ஏனாதி, கல்லூரணி, கோவானூா் ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT